Friday, August 10, 2018

கோட்களும் நாட்களும் Planets & Days
--------------------------------------------------------
ஆண்டுகளைக் கணக்கிட நமது முன்னோர் சுழற்சி முறையில் அறுபது ஆண்டுகள் திரும்பத் திரும்ப வருவதாகக் கணக்கிட்டுத் தந்துள்ளனர்.
வான் மண்டலத் தொகுதி அல்ல ராசி மண்டலத் தொகுதி ஒரு வட்டப் பாதையாக 360 பாகைகளைக் கொண்டு விளங்குகிறது. நாம்
முக்கியமானவை என்று கொண்டுள்ள 27 நக்ஷத்திரங்களும் இப்பாதையில் அமைந்துள்ளன. இதன் வழியாகவே ஒன்பது க்ரஹங்களும்
சஞ்சரிக்கின்றன. 360 பாகைகளில் 12 ராசிகள் அடங்கியுள் ளன. எனவே ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளைக் கொண்டுள்ளது. சூரியன் வான்
பாதையில் தினசரி 1 பாகை செல்கிறது. ஒருமுறை சுற்றிவர 365 நாள் 6 மணி நேரம் ஆகிறது.
குரு சுமார் ஒரு வருடத்தில் ஒரு ராசியைத் தாண்டும். சனி மாதத்துக்கு ஒரு பாகை நகரும். எனவே குரு ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி
வர 12 வருடங்கள் ஆகின்றன. சனி ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 30 வருடங்கள் ஆகின்றன.
சனியும் குருவும் சேர்ந்து அசுவதி நக்ஷத்திரத்தில் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகிறது. அதுவே பிரபவ வருடம்-இதுவே முதல்
வருடம். இதிலிருந்து 60 வருடங்கள் கணக்கிடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டின் பெயரும் காரணப் பெயராக அமைந்துள்ளது.
-----------------
ஆண்டுகள் 60 :
-------------------
1.பிரபவ
2.விபவ
3.சுக்கில
4.ப்ரமோதூத
5 ப்ரஜோத்பத்தி
6.ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8.பவ
9.யுவ
10.தாது
11.ஈசுவர
12.வெகுதான்ய
13.ப்ரமாதி
14.விக்கிரம
15.விஷு
16.சித்ரபானு
17.சுபானு
18.தாரண
19.பார்த்திப
20.விய
21.ஸர்வஜித்
22.ஸர்வதாரி
23.விரோதி
24.விக்ருதி
25.கர
26.நந்தன
27.விஜய
28.ஜய
29.மன்மத
30.துர்முகி
31.ஹேவிளம்பி
32.விளம்பி
33.விகாரி
34.சார்வரி
35.ப்லவ
36.சுபகிருது
37.சோபகிருது
38.குரோதி
39.விசுவாவசு
40.பராபவ
41.ப்லவங்க
42.கீலக
43.சௌமிய
44.சாதாரண
45.விரோதிகிருது
46.பரிதாபி
47.ப்ரமாதீ
48.ஆனந்த
49.ராக்ஷஸ
50.நள
51.பிங்கள
52.களயுக்தி
53.சித்தார்த்தி
54.ரௌத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்ரோத்காரி
58.ரக்தாக்ஷி
59.குரோதன
60.அக்ஷய
---------------------------------------------------------------
அசுவனி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களின் தமிழ் பெயர்கள் புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி.
----------------------------------------------------------------
27.நட்சத்திர அதிபதிகள் :
01.அஸ்வினி - கேது
02.பரணி - சுக்கிரன்
03.கார்த்திகை - சூரியன்
04.ரோகிணி - சந்திரன்
05.மிருகசீரிஷம் - செவ்வாய்
06.திருவாதிரை - ராகு
07.புனர்பூசம் - குரு (வியாழன்)
08.பூசம் - சனி
09.ஆயில்யம் - புதன்
10.மகம் - கேது
11.பூரம் - சுக்கிரன்
12.உத்திரம் - சூரியன்
13.அஸ்தம் - சந்திரன்
14.சித்திரை - செவ்வாய்
15.சுவாதி - ராகு
16.விசாகம் - குரு (வியாழன்)
17.அனுஷம் - சனி
18.கேட்டை - புதன்
19.மூலம் - கேது
20.பூராடம் - சுக்கிரன்
21.உத்திராடம் - சூரியன்
22.திருவோணம் - சந்திரன்
23.அவிட்டம் - செவ்வாய்
24.சதயம் - ராகு
25.பூரட்டாதி - குரு (வியாழன்)
26.உத்திரட்டாதி - சனி
27.ரேவதி - புதன்
---------------------------
ராசி மண்டலம் :
---------------------------
வான மண்டலத்தில் சூரியன் சுற்றி வரும் 360டிகிரி கொண்ட வட்ட வடிவ அல்லது முட்டை வடிவ பாதையே வான் மண்டல தொகுதி அல்லது ராசி மண்டல தொகுதி. அது12 பகுதிகளாக பிரிக்கப்பட்ட பூமியைச்சுற்றியுள்ள வான வெளி யின் மாபெரும் வட்டம்.
பிரிக்கப்பட்ட இந்த பகுதிகள்தான் ராசிகள்.ஒரு ராசிக்கு 30 பாகை.
------------------------------
ராசிகள் : 12 (360/30)
------------------------------
1.மேஷம்
2.ரிஷபம்
3.மிதுனம்
4.கடகம்
5.சிம்மம்
6.கன்னி
7.துலாம்
8.விருச்சிகம்
9.தனுசு
10.மகரம்
11.கும்பம்
12.மீனம்
----------------------
நவக்கிரகம்: 9
----------------------
சூரியன், சந்திரன், செவ்வாய்,
புதன், வியாழன், சுக்கிரன், சனி,
இராகு, கேது
--------------------------------------------------------
நவகிரகங்களின் தமிழ்ப் பெயர்கள் :
--------------------------------------------------------
1-சூரியன் (Sun) - திவாகரன்
2-சந்திரன் (Moon) - சோமன்
3-செவ்வாய் (Mars) - நிலமகன்
4-புதன் (Mercury) - புலவன்
5-குரு (Jupiter) - சீலன்
6-சுக்கிரன் (Venus) - கங்கன்
7-சனி (Saturn) - முதுமகன்
8-ராகு (Raghu) - கருநாகன்
9-கேது (Kethu) -செந்நாகன்
Shiva Raja yogi Dr.Suresh Raju
Cell:+91 9884380229
www.supremeholisticinstitute.com

No comments:

Post a Comment